20. அருள்மிகு சிவலோகநாதர் கோயில்
இறைவன் சிவலோகநாதர்
இறைவி சொக்கநாயகியம்மை
தீர்த்தம் கணபதி தீர்த்தம்
தல விருட்சம் புங்க மரம்
பதிகம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்
தல இருப்பிடம் திருப்புன்கூர், தமிழ்நாடு
வழிகாட்டி வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்து செல்லும் திருப்பனந்தாள் சாலையில் 4 கி.மீ. தொலைவில் உள்ளது.
தலச்சிறப்பு

Tirupungur Gopuramநந்தனாருக்காக சிவபெருமான் நந்தி சற்று விலகி இருக்கச் சொன்ன தலம். அதனால் நந்திதேவர் மூலவருக்கு நேராக இல்லாமல் விலகியே இருக்கிறார். நந்தி திருவுருவம் மிகவும் அழகாக உள்ளது. நந்தனார் ஊராகிய ஆதனூர் கோயிலுக்கு தெற்கே 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

மூலவர் 'சிவலோகநாதர்' என்னும் திருநாமத்துடன், கவசம் சாத்தப்பட்டு, லிங்க வடிவில் காட்சி தருகின்றார். அம்பிகை 'சௌந்தரநாயகி', 'சொக்கநாயகி அம்மை' என்னும் திருநாமங்களுடன் தரிசனம் தருகின்றாள். சுவாமிக்கு முன் உள்ள துவாரபாலகர்கள் காது கொடுத்துக் கேட்பதுபோல் உள்ளனர்.

Tirupungur Nandhiகோயிலுக்கு வெளியே உள்ள குளம் நந்தனார் விநாயகப் பெருமான் துணையுடன் வெட்டியதாகக் கூறுவர். அதனால் அந்தக் குளம் 'கணபதி தீர்த்தம்' என்று அழைக்கப்படுகிறது.

ஏயர்கோன் கலிக்காம நாயனார் வந்து வழிபட்ட தலம். அவரது ஊராகிய திருப்பெருமங்கலம் இங்கிருந்து வடக்கே 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் தலா ஒரு பதிகம் பாடியுள்ளார்.

இக்கோயில் காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com